வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்…. தலா 50 லட்சம் ரூபாய் அபதாரமும் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த திமுகவின் செய்தி தொடர்பாளரும்,  வழக்கறிஞருமான சரவணன்,   ஏடிஎம்கே பைல்ஸ் பற்றி வெளியிடுவேன் என சொன்னாரு. ஆனால் வெளியிட்டாரா ? அவர் வெளியிட மாட்டார்.  அதிமுக ஊழல் நாடறிந்தது. அதை பற்றி எல்லாம் அவர் பேச வேண்டாம்.

ஆளுநர் கிட்ட….. ஆளுநர் இவங்க கட்சி நியமித்த ஆளு…… எதுக்குன்னாலும் பொசுக்குன்னு போய் ஆளுநரை போய் பார்க்கிறாங்க.... ஆளுநர் கிட்ட போய் அய்யா அதிமுக ஊழல் பைல் உங்ககிட்ட இருக்கு தயவு செஞ்சி அதுல ஆக்சன் எடுங்கன்னு சொல்லக்கூடிய தைரியம் அண்ணாமலைக்கு இருக்கிறதா ? அப்படி கேட்டாங்கன்னா…. அண்ணாமலை அவருடைய பதவி தப்புமா ? அப்படி கேட்டாங்க என்றால், பாஜகவில் இருந்து அண்ணாமலையை பாஜகவின் தலைவராக நீடிக்க விடுவார்களா ? இது ஒரு முக்கியமான கேள்வி….

இன்னொரு கேள்வி திரு. ஜெயக்குமார் அவர்கள் எல்லாம் ஊழலைப் பற்றி பேசக் கூடாது. அதிமுகவில் இருக்கக்கூடிய யாரும் ஊழலைப் பற்றி பேசக் கூடாது. இந்த நீதிபதி சிறந்தவரு. நல்ல ஜட்ஜ்மெண்ட் கொடுத்ததற்கு என்ன சொல்கிறார்…..  எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்குல….. நீதிமன்ற  டயத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க என சொல்றாரு…..  எடப்பாடி பழனிச்சாமி புனிதரா ? அவர் வானத்திலிருந்து குதித்த தேவ தூதரா ? ஊழலே செய்யலையா அவரு ? அவரு மாமனுக்கும்,  மச்சானுக்கும் எப்படி காண்ட்ராக்ட் கொடுத்தார் என்று சொல்லி தான் தமிழ்நாடு மக்கள் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.