சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  திமுகவின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்திருக்கக்கூடிய ஒரு மூத்த அமைச்சர். அதுவும் முக்கியமான துறை பொறுப்பில் இருக்கக்கூடிய அமைச்சரை இன்னைக்கு குற்றவாளி என தீர்ப்பளித்து இருகாங்க. எப்படி தீர்ப்பளித்தார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களே பார்க்கின்றார்கள்.

கீழமை நீதிமன்றத்தில் தலையீட்டார்கள். அது ஒரு பெரிய பிரச்சனையாக வெடிச்சு… திரும்ப உயர்நீதிமன்றத்தில் ரிவ்யூ பண்ணி….. அது உச்சநீதிமன்றியத்திற்கு போய்… தலைமை நீதிபதி அமர்வு போய்…. மறுபடியும் ரிவ்யூ போய்…. திரும்ப உயர்நீதிமன்ற அமர்வுக்கு வந்து இன்னைக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதே பட்டியலில் பார்த்தீர்கள் என்றால்….. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இருக்காங்க.

ஆல் மோஸ்ட் எல்லாரும் சேம் லைன்ல வருவாங்க….  அனிதா ராதாகிருஷ்ணன் இருக்காங்க…. கீதா ஜீவன் இருக்கிறாங்க…..  இதே சீரியஸ் ஆஃப் ஜட்ஜ்மெண்ட் பாத்தீங்கனா…. அதனால இது ஆரம்பம்தான் என பார்க்கின்றேன்.  2024 மத்தியில் இன்னும் 4, 5 அமைச்சர்கள் இந்த பட்டியலில் வரிசையாக வருவார்கள்.  திமுகவினுடைய  தலைவர்கள் அல்லது  செய்தி தொடர்பாளர்கள் சொல்வது போல….  இது ஒரு தனிப்பட்ட மனிதனுடைய விஷயமாக பார்க்க முடியாது. இது ஒரு சீரியஸ் ஆப் த கேஸ். செந்தில் பாலாஜியில்  ஆரம்பிச்சு…..  அமைச்சர் பொன்முடி அவர்களிலிருந்து வரிசையாக வரக்கூடிய 4 , 5 பட்டியல் என DMKவினரை பதற வைத்தார்.