கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட வாரியாக இந்திய காவல் பணி அதிகாரிகள், மீட்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் நியமிக்கப்பட்டார்கள்.

அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர்,  வீரர்கள் படகுகள், உபகரணங்கள் 375 வீரர்கள் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 15 குழுக்கள்…..  275 வீரர்கள் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் 10 குழுக்கள் களத்தில் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதலாக மீட்பு பணிகளை விரைவுபடுத்த தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 230 பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இது மட்டும் இன்றி நமது ராணுவ வீரர்கள் 168 பேர் மீட்டு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னெச்சரிக்கையாக இதுவரை 12653 பேர் மீட்கப்பட்டு,  141 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு…. உணவு – குடிநீர் – மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தப் பெரும் மழையினையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளையும் நானும்,  தலைமைச் செயலாளர் அவர்களும் பலரும் முறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுடன் காணொளி வாயிலாகவும்,  தொலைபேசி வாயிலாகவும் அவ்வப்போது கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார்.