சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி  அவரது மனைவிக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா 50 லட்சம் அபதாரமும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இதை பாரதிய ஜனதா கட்சி நாங்கள் வரவேற்கின்றோம். குறிப்பாக 2017இல் இருந்து அப்பீல் எல்லாம் போய் இன்றைக்கு இறுதி தீர்ப்பு வந்துள்ளது. கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் கூட கடைசியாக ஒரு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது.

இதை வரவேற்கின்றோம். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஒரு சமுதாயம் படைப்பதற்கு  இது ஒரு படிக்கலாக அமையட்டும் என்றும் நம்புகின்றோம். ஒரு அமைச்சர் புழல் சிறையில் இருக்காரு. இலாக்கா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது.  இரண்டாவது ஒரு சீட்டிங் மினிஸ்டர்….  அதுவும் ஒரு சீனியர் மினிஸ்டர்….

திமுகவின் உடைய ஆரம்ப காலத்தில் இருந்திருக்கக்கூடிய ஒரு மூத்த அமைச்சர். அதுவும் முக்கியமான துறை பொறுப்பில் இருக்கக்கூடிய அமைச்சரை இன்னைக்கு குற்றவாளி என தீர்ப்பளித்து இருகாங்க. எப்படி தீர்ப்பளித்தார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்களே பார்க்கின்றார்கள். கீழமை நீதிமன்றத்தில் தலையீட்டார்கள். அது ஒரு பெரிய பிரச்சனையாக வெடிச்சு… திரும்ப உயர்நீதிமன்றத்தில் ரிவ்யூ பண்ணி….. அது உச்சநீதிமன்றியத்திற்கு போய்… தலைமை நீதிபதி அமர்வு போய்…. மறுபடியும் ரிவ்யூ போய்…. திரும்ப உயர்நீதிமன்ற அமர்வுக்கு வந்து இன்னைக்கு தண்டனை கிடைத்துள்ளது என தெரிவித்தார்.