கடந்த 1997 ஆம் வருடம் அஜித், விக்ரம் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் “உல்லாசம்”. ஜேடி-ஜெர்ரி போன்றோர் இயக்கியிருந்த இந்த படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தயாரித்து இருந்தார். இதில் கதாநாயகியாக நடிகை மகேஷ்வரி நடித்திருந்தார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் சுமார் 40 திரைப்படங்களுக்கு மேல் நடித்து உள்ளார்.

இதில் மகேஷ்வரி மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் சித்தி மகள் என்பது கவனிக்கத்தக்கது. மகேஸ்வரி சினிமாவை தாண்டி தற்போது சொந்த தொழில் ஒன்று செய்து வருகிறார். அதாவது அவர் பேஷன் டிசைனிங் தொழிலில் தன் முழு கவனத்தை செலுத்தி வருகிறாராம். மேலும் ஸ்ரீதேவி மகள்களுடன் சேர்ந்து பேஷன் டிசைனிங் பணியில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறாராம்.