சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட திரைப்படங்களை டைரக்டு செய்த ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் “பத்து தல”. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் கௌதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது. வருகிற 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்து தல படத்தில் இடம்பெற்றுள்ள ராவடி பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.