
புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த 27ஆம் ஆண்டு தொடக்க முப்பெரும் விழாவில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகனும், புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவருமான ஷ்யாம் கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டில் யாரும் பேசாத தேசியத்தை முதன் முதலில் டாக்டர் ஐயா தான் பேசினார். அப்படி இருக்கும் நாங்கள் பாதிக்கப்படும்போது…. எல்லாரும் ஓடி வந்துருக்க வேண்டாமா ? யாரும் வரவில்லை. அதுக்காக டாக்டர் ஐயா எல்லாம் போராடாமல் இருக்க மாட்டார். யாரும் வர வேண்டாம்.
நாங்கள் போராடி கொள்கின்றோம். எங்களுடைய தீர்வுக்கு எல்லாம் நாங்க தான் போராடி வாங்கி இருக்கின்றோம். அதனால இளைஞர்கள் எல்லாம் இதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் மதுவிலக்கு இலக்கு என்று இருக்கின்றோம்…. நம்முடைய வரலாறு, வன்முறையை வன்முறையால் அடக்கி இருந்தவர்கள் நாம்…. அதுபோல இந்த மது, டாஸ்மார்க் என்று நம் மீது ஏவப்பட்டுள்ள வன்முறையை, தேவைப்பட்டால் வன்முறையாலேயே கடைகள் எல்லாம் காலி செய்ய வேண்டிய நேரம் வரும்.
ஸ்டாலினும், உதயநிதியும் இதை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு கவலை இல்லை. நீங்க பண போதையிலும், அதிகார போதையிலும் இருக்கிறீங்க.. எங்க மக்கள், இளைஞர்கள் எல்லாம் மதுவால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். ஒரு எல்லை தான்… அந்த எல்லைக்கு மேல போனால்…. பல வழக்குகளை பார்த்தாச்சு…. இந்த சமுதாயத்தில் பல சிறை பறவைகள் இருக்கிறார்கள்… அப்படியே களப்போராளிகள் எல்லாம் இருக்குறாங்க என தெரிவித்தார்.