சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

எப்போதுமே மத்திய ஆட்சியில் காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி,  பிஜேபி ஆண்டாலும் சரி,  மாற்றான் தாய் பிள்ளை போல தான் தமிழ்நாட்ட பாக்குறாங்க. ஆகவே கேட்கின்ற நிதி எப்போதும் மத்திய அரசாங்கம் கொடுத்ததா வரலாறு கிடையாது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் மத்திய அரசு மனிதாபிமானத்தோடு மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உதவிகளை அளிக்க வேண்டும் என்பது  எங்களுடைய நிலைப்பாடு. தமிழ்நாடு மக்கள் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் அதுதான் எங்களுடைய கொள்கை.

இவர்களைப் போல் அரசியல் செய்வதற்கு நாங்கள் அல்ல. மக்களுக்காக ஆட்சி என்ற கட்சி அண்ணா திமுக கட்சி. மக்கள் எப்பொழுதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அது மத்திய அரசினுடைய கடமை என்பதை  அவர்கள் உணர்ந்து,  தேவையான அளவிற்கு மத்திய அரசு இந்த பேரிடர் காலத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.