சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

26 கட்சிகள் ஒன்றாக  சேர்ந்து இந்தியா கூட்டணி என ஒரு கூட்டணி அமைத்தார்கள். பல்வேறு கருத்து வேற்றுமைகள் உள்ள கட்சி எல்லாம் ஒன்றாக இணைந்து இருக்கிறது. அந்த கட்சியில் இப்பொழுதே புகைச்சல் வந்துவிட்டது. 19ஆம் தேதி நடந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் பேசுகிறபோது…..    திரு டி.ஆர் பாலு எம்பி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சொல்ல சொன்னார். கூடாது நீங்க வேணும்னா ஹிந்தி படிச்சிட்டு வாங்க அப்படி சொன்னதோடு,  என்னுடைய பேச்சை மொழிபெயர்க்காதே என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். இதுதான் நிலைமை. இப்பொழுதே புகைய தொடங்கிவிட்டது.

எப்போது பார்த்தாலும் விடியா திமுக முதலமைச்சர் தமிழ் தமிழ் என்று பேசுவார். அங்கே ஏன் குரல் கொடுப்பதில்லை ? இதுதான் திமுக உடைய இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.    இன்னொன்று சொல்கிறார் உங்களுக்கு யார் பிரைம் மினிஸ்டர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும் மக்கள்தான் எஜமானர்கள். மக்களுக்காக தான் கட்சி… மக்களுக்காக தான் அரசாங்கம்…. மினிஸ்டர் காக அல்ல.

தமிழ்நாடு மக்கள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அந்த பாதிப்பில் இருந்து மீட்டெடுப்பதற்கு எங்களுடைய நாடாளுமன்றம் தேவை, நாடாளுமன்ற உறுப்பினர் தேவை…. அவர்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். இங்கே இருக்கின்ற…..  வாக்களித்த  வாக்காளர்கள் குரல்  நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும், அதுதான் எங்களுடைய பிரதான எண்ணம்.

தமிழ்நாடு மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர வேண்டும்,  தேவையான நிதியை மத்திய அரசிடம் பெற வேண்டும். தமிழ்நாடு வளர்ச்சி பெறுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு யார் பிரைம் மினிஸ்டர் என்று பார்க்கவில்லை. மக்கள் தான் வாக்களிக்க வேண்டியவர்கள். மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். நாம் கூட்டணியில் அங்கம் வகிச்சோம்

தமிழ்நாட்டு மக்களுக்கு விரோதமான செயல் வருகின்ற போது கூட்டணி தர்மம் என்று நிலையில தள்ளிவிட்டு இருந்தோம்.  இனி அந்த நிலை கிடையாது. இன்றைக்கு தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் வாக்களிக்கின்ற மக்கள்தான் எஜமானர்கள். அந்த மக்களுக்கு என்ன தேவை என்பதை நாடாளுமன்றத்திலே கேட்போம் என்றார்.