சென்னை வானகரம் ஸ்ரீவாரு ஸ்ரீ வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுகவின் செயற்குழு –  பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் பேசி வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,

கழகத்தினுடைய மாநாடு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி. மதுரை மாநகரமே குலுங்குகின்ற அளவுக்கு வரலாற்று சிறப்புமிக்க கழக வீர பொன்விழா எழுச்சி மாநாடு. உங்களுடைய மகத்தான ஆதரவின் பேரில் நடந்து முடிந்தது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றிலேயே சுமார் 15 லட்சம் பேர் கலந்துகொண்டு வெற்றி மாநாடாக நடத்தி காட்டினோம்.

அந்த மாநாடு வெற்றி பெறுவதற்கு இங்கே என்னோடு அமர்ந்திருக்கிறீர்கள்.  நகர – கழக –  செயலாளர்கள் – ஒன்றிய கழகச் செயலாளர்கள் – பேரூர் கழகச் செயலாளர்கள் – பகுதி கழக செயலாளர் மேடையில் வீற்றிருக்கின்ற தலைமை கழக நிர்வாகிகள் – நாடாளுமன்ற சட்டமன்ற

உறுப்பினர்கள் – அனைவரும் ஒருமித்த கருத்தோடு நீங்கள் பணியாற்றிய காரணத்தினால் தான் மதுரையில் நடைபெற்ற கழக வீர பொன்விழா எழுச்சி மாநாடு மிகச் சிறப்பாக,  எழுச்சியாக…  எதிரிகள் அஞ்சுகிற அளவுக்கு அந்த மாநாடு நடைபெற்று முடிந்தது.

அந்த மாநாட்டை பற்றி இன்றைக்கு இருக்கின்ற விளையாட்டு அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விமர்சித்து பேசினார். அண்ணா திமுக மாநாட்டை போல எங்க மாநாடு இருக்காது.   எடுத்துக்காட்டு மாநாடாக சேலத்தில் நடைபெறுகின்ற திமுக இளைஞர் மாநாடு நடக்குதுன்னு சொன்னாரு. அவர் சொன்னது தான் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டு விட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சிக்கின்ற போது  இதான் நடக்கும். அதனால் நாவடக்கம் தேவை. அரசியல் கத்துக்குட்டியாக இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திமுகவை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அது வீர வரலாற்று மாநாடு. இனி எந்த கட்சியாலும் அந்த மாநாட்டை வெல்ல முடியாது. அந்த அளவுக்கு சிறப்பாக அமைந்த மாநாடு என பேசினார்.