கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கயிறு இழுத்தல் போட்டியில் இரண்டு அணியினருக்கும் இடையே கயிறை இழுக்கும் போட்டி நடைபெறும்.

இந்த போட்டியில் இருதரப்பினரும் போட்டி போட்டுக் கொண்டு கயிறு இழுத்தனர். இதில் திடீரென அண்ணாமலை பக்கம் இருந்த கயிறு அறுந்து விழுந்தது. இதில் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கீழே சரிந்தனர். கீழே தடுமாறி விழச்சென்ற அண்ணாமலையை பாதுகாவலர்கள் தாங்கிப் பிடித்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.