
பெரியாரைப் பற்றி பேசுபவர்கள் பிறப்பு சரியில்லை என துரைமுருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, நான் என்னுடைய அப்பா, அம்மாவிற்கு தான் பிறந்தேன் சந்தேகம் இல்லை, நான் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்பதிலும் எனக்கு சந்தேகம் இல்லை.
இதுவரை எந்த ஊழலும் செய்யவில்லை அதிலும் எனக்கு சந்தேகம் இல்லை. எங்கள் பிறப்பு நல்ல பிறப்பு தான். நான் கூறிய காணொளியில் துரைமுருகன் நன்றாக பார்க்க வேண்டும். 1962 இல் பெரியார் சில மனிதர்களைப் பற்றி கூறியுள்ளார். இதனை முரசொலியில் வெளியிட்டுள்ளனர். எனவே துரைமுருகன் 1962 ல் உள்ள முரசொலி நாளிதழை வாங்கி நன்றாக பார்க்க வேண்டும். இவ்வாறு பதிலளித்துள்ளார்.