தமிழகத்தில் முதல் முறையாக தமிழக வெற்றி கழகம் கட்சி ஆரம்பித்த இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது இந்தியா முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. திமுக கூட்டணி கட்சிகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து அடுத்தடுத்து விலகியும் வருகின்றனர். குறிப்பாக தமிழக வெற்றி கழக கூட்டணியில் இடம் பெற்ற விசிக, ஐயூஎம்எல், காங்கிரஸ் கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணி தமிழகத்தில் இல்லை என்று கூறியது.

அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் இந்த நிலையில் தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அதிமுகவுடன் அமமுகவை இணைக்கவில்லை என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாங்கள் தொடர்வதாகவும் தெளிவுபடுத்திய அவர் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அதிமுகவுக்கு ஆதரவாக நிற்போம் என்று அவர்களுடன் ஆன கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து எம்எல்ஏக்கள் பலர் ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் பலரும் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வரும் நிலையில் தற்போது டிடிவி தினகரனின் இந்த அறிவிப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.