உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூருக்கு விழாக்காலம் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் குறையாது காணப்படும். திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் குறிப்பாக கடலில் நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது கோடை காலம் என்பதால் திருச்செந்தூர் கடலில் இருந்து அதிக அளவில் ஜெல்லி மீன்கள் வெளியே வந்து கொண்டிருக்கிறது. இந்த மீன் மேலே பட்டால் தீக்காயம் பட்டது போல் அதிக அளவில் எரிச்சல் போன்ற உபாதைகள் ஏற்படும். இதன் காரணமாக பக்தர்கள் நீண்ட நேரம் திருச்செந்தூர் கடலில் குளிக்க வேண்டாம் எனவும் இந்த ஜெல்லி மீன்களை கண்டால் உடனடியாக வெளியே வந்து விட வேண்டும் எனவும் மைக் மூலமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.