சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாள பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே நாளை (திங்கட்கிழமை) ஈரோடு-ஜோலார்பேட்டை(06412), ஜோலார்பேட்டை- ஈரோடு(06411) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.