சென்னை கன்னியாகுமரி இடையே ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதால் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக கொல்லத்துக்கு இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டது. வருகிற 7- ஆம் தேதி முதல் ரயில் நேரம் மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு வழக்கம் போல புறப்படும் ரயில் காலை 6.45 மணிக்கு பதிலாக 15 நிமிடங்கள் முன்னதாக 6.30 மணிக்கு நெல்லை வந்தடையும். இதனையடுத்து 6.35 மணிக்கு புறப்பட்டு 7.03 மணிக்கு நாங்குநேரி, 7.15 மணிக்கு வள்ளியூர், 7.38 மணிக்கு ஆரல்வாய்மொழி, 8.07 மணிக்கு நாகர்கோவில் டவுனை சென்றடைகிறது. இதனையடுத்து காலை 11:45 மணிக்கு பதிலாக 5 நிமிடங்கள் முன்னதாக காலை 11.40 மணிக்கு ரயில் கொல்லத்தை சென்றடையும்.

இதேபோல் நெல்லை சந்திப்பிலிருந்து தினமும் காலை 6.35 மணிக்கு இயக்கப்படும் நாகர்கோவில் பாசஞ்சர் சிறப்பு ரயில் 7-ஆம் தேதி முதல் 7.10 மணிக்கு புறப்பட்டு 7.49 மணிக்கு நாங்குநேரி, 7. 52 மணிக்கு வள்ளியூர், 8.03 மணிக்கு பணகுடி, 8.09 மணிக்கு காவல்கிணறு, 8.21 மணிக்கு ஆரல்வாய்மொழி, 8. 26 மணிக்கு தேவாளை சென்று, காலை 8.10 மணிக்கு பதிலாக 9 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.