தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதன் பிறகு அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு விடா முயற்சி என்று தலைப்பு வைத்துள்ளனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித் படத்தின் அறிவிப்பு வெளியானது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் பற்றியும் வி சென்டிமென்ட் பற்றியும் தான் தற்போது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பேசி கொள்கிறார்கள்.

அதாவது நடிகர் அஜித் இதுவரை நடித்த 9 படங்களுக்கு வி என்ற எழுத்தில் தான் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பத்தாவது முறையாகவும் வி என்ற எழுத்தில் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் அஜித் நடித்த Vanmathi (வான்மதி), Valli (வாலி), Villan (வில்லன்), varalaru வரலாறு), Veeram வீரம்), vedhalam (வேதாளம்), vivekam (விவேகம்), Vishvasam (விஸ்வாசம்), Valimai (வலிமை), Vidamuyarchi (விடாமுயற்சி) போன்ற படங்களுக்கு ஆங்கிலத்தில் முதல் எழுத்து வி லெட்டர் ஆகும். மேலும் வி லெட்டரில் தொடங்கும் படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது விடாமுயற்சி படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.