தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகராக இருப்பவர் நவீன். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகர் நவின் சன் டிவியின் செய்தி வாசிப்பாளர் கண்மணியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் அண்மையில் ஒரு டீக்கடையை திறந்தனர்.

இந்நிலையில் நவீனின் மனைவி கண்மணி கர்பமாக இருந்த நிலையில் தற்போது அத்தம்பதிகளுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக அறிவித்துள்ளனர். மேலும் நவீன்- கண்மணி தம்பதிக்கு தற்போது இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.