தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பாவனா. மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தால் பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். நடிகை பாவனா தமிழில் தீபாவளி, அசல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் இன்று பிறந்த நாளை கொண்டாடுவதால் அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அஜித்துடன் சேர்ந்த அசல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை பாவனா நடிகர் அஜித்துக்கு வீடியோ கால் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்டை நடிகை பாவனா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அசல் படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram