தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகி உள்ளது. ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என்ற தலைப்பு வைத்துள்ள நிலையில் மகிழ்திருமேனி படத்தை இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் நேபாள நாட்டிற்கு பைக் சுற்றுப்பயணம் சென்றுள்ள நடிகர் அஜித் அங்கு ரோட்டில் வெறும் தரையில் படுத்து தூங்கும் போட்டோக்கள் தற்போதும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாடே தல அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரோட்டில் அதுவும்  தரையில் படுத்து தூங்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு அவருடைய எளிமை நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.