தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் தற்போது லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏகே 62 படத்தின் அறிவிப்பு இன்று நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏகே 62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் கதையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று ஏகே 62 பட குழுவினருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் நடிகர் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித், மகிழ் திருமேனி, நீரவ், சுரேஷ் சந்திரா ஆகியோருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.