பெங்களூரைச் சேர்ந்த ஒரு மில்லெனியல் தம்பதியினர் பின்பற்றி வரும் 5 எளிய நிதி விதிகளும், அவர்களின் எளிமையான வாழ்க்கை முறையும் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகின்றன.

இன்றைய காலகட்டத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கும், போலியான கௌரவத்திற்கும் பலர் லட்சக்கணக்கில் கடன் வாங்கிச் செலவு செய்து வரும் சூழலில், இந்தத் தம்பதியினரின் நிதி மேலாண்மை குறித்த கருத்துக்கள் பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் “ஆடம்பர கார்கள் வேண்டாம், விலை உயர்ந்த பிராண்டட் ஆடைகள் வேண்டாம்” என்ற கொள்கையோடு இவர்கள் தங்களின் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து வாழும் விதம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர்கள் பகிர்ந்துகொண்ட அந்த முக்கிய நிதி விதிகளின் மையக்கருத்து, சமூக அந்தஸ்துக்காகப் பணத்தை விரயம் செய்யாமல் இருப்பதே ஆகும்.

ஆடம்பரப் பொருட்களைத் தவிர்த்து தேவைக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பது, மற்றவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகக் கடன் வாங்கிச் செலவு செய்யாமல் இருப்பது, வருமானம் அதிகரிக்கும் போது செலவுகளையும் உயர்த்தும் ‘லைஃப்ஸ்டைல் பணவீக்கத்தை’ கட்டுப்படுத்த வேண்டும்.

சேமிக்கும் பணத்தை முறையாக நல்ல திட்டங்களில் முதலீடு செய்து நிதி சுதந்திரம் அடைவது மற்றும் தேவையற்ற ஆடம்பரங்களை விடக் குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஆகிய கொள்கைகளை இவர்கள் உறுதியாகப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தத் தம்பதியின் பதிவு, குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடம்பரப் பொருட்களை வைத்திருப்பதே வெற்றி என்று நினைக்கும் இக்காலச் சமூகத்தில், அமைதியான மற்றும் கடன் இல்லாத வாழ்க்கையே உண்மையான மகிழ்ச்சி என்பதை இவர்கள் உணர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் சேமிப்பு மற்றும் முறையான முதலீட்டின் முக்கியத்துவத்தை எளிமையாக விளக்கியுள்ள இந்த 5 விதிகள், நிதித் திட்டமிடல் குறித்து யோசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளன.

“>