கோவாவிலிருந்து மும்பைக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, அவருடைய உடைமைகள் சரியாகக் கையாளப்படாததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர் கொண்டு வந்த ₹55,000 மதிப்புள்ள புகைப்படக் கருவிக்கான முக்காலி முற்றிலும் சேதமடைந்துள்ளது. தனது இலக்கை அடைந்து உடைமைகளைப் பெற்றபோது, மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அந்தப் பொருள் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சேதம் குறித்து விமான நிறுவனத்திடம் அவர் முறையிட்டபோது, அவருக்கு மேலும் ஏமாற்றமே மிஞ்சியது. ₹55,000 மதிப்புள்ள பொருளுக்கு இழப்பீடாக வெறும் ₹5,000 மட்டுமே வழங்குவதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பிரச்சனை குறித்துப் பேச முற்பட்டபோது, விமான நிலைய ஊழியர்கள் மற்றும் நிர்வாகம் மிகவும் அலட்சியமாகவும், மரியாதைக் குறைவாகவும் நடந்துகொண்டதாகப் பாதிக்கப்பட்ட பயணி குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த அலட்சியமான போக்கிற்கு இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நிறுவனம் வழங்கும் இந்த சொற்ப இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனப் பலரும் அப்பயணிக்கு அறிவுறுத்தியுள்ளதுடன், வாடிக்கையாளர்களின் உடைமைகளுக்கு உரிய முறையில் பொறுப்பேற்று தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
See this Instagram photo by @sameerpunjabiii https://t.co/zFLa7M2PcP
“>
