திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், DMK வை யாரும் குறை சொன்னா கேளுங்க… எங்கள் தலைவர் சொன்ன  ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் சொன்ன 15 லட்சம் என்ன ஆனது என்று கேளுங்கள் ? மூன்று மாதங்களுக்கு முன்பு சிஏஜி தணிக்கை குழு… திமுகவினுடைய அமைப்பு கிடையாது… ஒன்றிய அரசின் அமைப்பு…. அவர்களுடைய வேலையே  ஒன்றிய அரசு,  மாநில அரசு செய்கின்ற செலவுகளை தணிக்கை செய்வது…

செலவு எல்லாம் சரியாக பண்ணியிருக்கிறார்களா? வரவுக்கு  தகுந்த செலவு இருக்கிறதா ?என்ன செலவு பண்ணியிருக்கிறார்கள் ? சொன்ன திட்டத்திற்கு செலவு பண்ணி இருக்கிறார்களா ? என்று ஆடிட்டிங் செய்வதுதான் அவுங்க வேலை.. மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்….

CAG அறிக்கையில் 9 ஆண்டுகளில் பாஜக அரசின் உடைய அத்தனை ஊழல்களும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. ஏழரை லட்சம் கோடி ரூபாய்க்கு கணக்கு இல்லை. 7 லட்சம் கோடி ரூபாய் எங்கு போனது என்று கேட்கிறார்கள் ? ஒரு கிலோமீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி செலவு செய்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு…. ஒரு கிலோ மீட்டர் ரோடுக்கு 250 கோடி ரூபாய் செலவு… அதே மாதிரி ஆயுஸ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம்…

பல வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படம் வந்தது.  ரமணா என்ற திரைப்படம். நீங்கள் எல்லாம் பார்த்து இருப்பீர்கள் . அதில் ஒரு காட்சி வரும்… ஒருவர் இறந்து போயிருப்பார்… அவர்கள் உறவினர்கள் மருத்துவமனைக்கு  கூட்டிச் செல்வர்கள்…  இறந்தவர்களை அறைக்குள் பூட்டி வைத்து,  அவர் உயிரோடுதான் இருக்கிறார்…  ஆபரேஷன் பண்ணா சரியாகிவிடும் என்று சொல்லி,

மருந்து மாத்திரை வாங்கிட்டு வாங்க… ஆப்ரேஷன் செலவுக்கு… காசு கட்டிட்டு வாங்க என்று, ஒரு  மருத்துவமனை கொலை அடிக்கும்… திரையில் பார்த்ததை நிஜத்தில் செய்து காட்டி இருக்கிறது ஒன்றிய பாஜக அரசு… இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.