
தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, பெரியார் அவர்கள் சர்வதிகாரியாக மாறிவிட்டார். திருமணத்திற்கு பிறகு முழு சர்வாதிகாரியாக மாறிவிட்டார். அவரிடத்திலே எங்களுக்கு எந்த நியாயம் கிடைக்கும் என்று தெரியவில்லை. அதனால் தனி கட்சி தேவை படுக்கின்றது. அதற்காக Dravidian Progressive Federation, திராவிட முன்னேற்றக் கழகம் தேவைப்படுகிறது என்று 16.8.1949இல் ஆரம்பிக்குறாங்க. பெரியார் முழுவதும் வேண்டாம் என்று சொல்லி வந்தவர்கள்….. பெரியாரை சர்வாதிகாரி என்று சொன்னவர்கள்…..
இன்னைக்கு நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சர்வாதிகாரி என்று சொல்கிறார். என்ன டிராமா ? என்ன காமெடி பாருங்க….. இன்னைக்கு வந்து இல்லை இல்லை பெரியார் அவர்கள் தான் எங்களுக்கு எல்லாம். அவர்தான் எங்களுடைய தந்தை.. அவர்கள் இல்லாமல் நாங்க இல்ல என சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் அனைவருமே பெரியாரை எதிர்த்து வெளியே வந்தவர்கள்…. பெரியார் வேண்டவே வேண்டாம் என வந்தார்கள்.
18ஆம் தேதி அதே மாசத்துல இரண்டு நாள் கழிச்சு ஒரு பொதுக்கூட்டம் போடுறாங்க… ராபின்சன் பூங்காவில் போடுறாங்க…. 28 பேர்….. 27 பேர் பேசுறாங்க….. அந்த லிஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தீர்கள் என்றால், இன்னைக்கு இருக்கக்கூடிய யாருமே அங்க இருக்க மாட்டாங்க. அவங்க யாருன்னு கூட நமக்கு தெரியாது. 27 பேர் பேசி அந்த கட்சியை ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு ஐம்பெரும் தலைவர்கள் என 5 பேரை கொண்டு வந்தாங்க.
கருணாநிதி அவர்கள் ஒவ்வொருத்தரா க்ளோஸ் பண்ணி…. ஒருத்தர் மேல ஊழல் குற்றச்சாட்டு, அவரை வெளியே அனுப்பியாச்சு…. ஒருத்தர் எம்ஜிஆர் அய்யாவோட போய் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கும் போது அங்கு போய்ட்டாரு…. இ.வி.கே சம்பத் ஐம்பெரும் தலைவர்களில் எனக்கு வேலையே வேண்டாம் என்று திமுக விட்டு வெளிய கிளம்பிட்டாரு என தெரிவித்தார்.