தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை,  பிஜேபியை பொறுத்தவரை சின்ன சின்ன உரசல்கள்…. நீங்க அடிக்கடி சொல்லுவீங்க….  அண்ணே என்னை உரசிட்டான்…. என்னை குத்திட்டான்…. என்னை நோண்டிட்டான்.  எனக்கு வரும்போது சேர் கூட  போடல. நமக்கு அது தேவையில்லை…  நம்ம கட்சியை பொறுத்தவரை ஜனநாயக முறையில கட்டமைத்துக்  கொண்டிருக்கிறோம். அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இந்த கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கட்டப்படுகின்ற கட்சி.

அப்படி இருக்கும்போது ஜனநாயக முறை மட்டும்தான் இந்த கட்சிக்கு தீர்வு.  அதான்   பரஸ்பரம் நீங்க எல்லாம் உங்களுக்குள்ள பேசி,  ஒத்து போய்….  சின்ன சின்ன விஷயங்களை விட்டுக்கொடுத்து….  நம்முடைய larger goal ( பெரிய இலக்கு )   என்ன ? மோடி ஐயாவை ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.

smaler goal ( சிறிய இலக்கு )  என்ன ? தமிழகத்தில் பாரதியஜனதா கட்சியை வளர்க்க  வேண்டும். அதைவிட smaler goal ( சிறிய இலக்கு )  என்ன ? சென்னை பாராளுமன்ற தொகுதியில்  நீங்க ஜெயிக்கணும். அதைவிட  smaler goal ( சிறிய இலக்கு )  என்ன ? உங்கள் பகுதியில பாரதிய ஜனதா கட்சியை பலப்படுத்த வேண்டும். அதைவிட smaler goal ( சிறிய இலக்கு )   என்ன ?  நீங்க பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினாரகா பலமா இருக்கணும்.  இதை மறந்து விடாதீர்கள். larger goal ( பெரிய இலக்கு ) மோடி என தெரிவித்தார்.