அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது நோயை குறித்து சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது நாட்டில் எதை சாப்பிட்டாலும் ஒரு மர்மமான ஒவ்வாமை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவர் தனது நாட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் பெயர் பீ. அவருக்கு ஒரு மர்மமான உவமை இருந்தது அதன் காரணமாக அவரது உடல் ஒவ்வொரு நாளும் புதிய தடிப்புகள் மற்றும் கடுமையான எதிர்வினைகளுடன் போராடியது நிலைமை மிகவும் மோசமானதால் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறி ஐரோப்பாவில் குடியேற முடிவு செய்தார்.
அதன் பின் அவர் டிக் டாக்கில் ஒரு தொடரை தொடங்கினார். அதில் அமெரிக்காவில் ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை அவர் எவ்வாறு சாப்பிடுகிறார் என்பதை காட்டுகிறார். ஒரு வீடியோவில் முன்பு கடுமையான ஒவ்வாமையை ஏற்படுத்திய ஒன்றை தற்செயலாக சாப்பிட்டதாகவும் ஆனால் இந்த முறை அது எதையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் தனது ஒவ்வாமை காண உண்மையான காரணம் அங்குள்ள உணவில் உள்ள மைகோட்டாக்ஸின்கள் என்றும் அவை பூஞ்சையால் வெளியிடப்படும் நச்சுப் பொருள்கள் என்றும் பி நம்புகிறார். மோசமான சேமிப்பு மற்றும் தளர்வான உணவு பாதுகாப்பு விதிகள் காரணமாக இவை பெரும்பாலும் உணவில் சேர்க்கப்படுகின்றன என்றும் கூறியுள்ளார்.
