மின்கம்பத்தின் இடையில் தலை மாட்டிக்கொண்டு உயிருக்குத் தவித்த நாய் ஒன்றைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்களது சொந்தப் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் மீட்டெடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.

எதிர்பாராத விதமாக அந்தச் சிறிய மின்கம்பத்தின் நடுவே தலை மாட்டிக்கொண்ட அந்த நாய், வெளியே வர முடியாமல் தனது உடம்பைத் தூக்கிப் போட்டு ஆட்டியபடி மரண பயத்தில் தவித்துள்ளது.

இதைக் கண்டு பதறியடித்த கிராம மக்கள், மின்சாரம்பாயும் ஆபத்து இருப்பதை அறிந்தும் உடனடியாக ஓடிவந்து, ஒருத்தர் உடம்பைத் தாங்கிப் பிடித்து, மின்கம்பத்தின் நடுவிலிருந்து அதன் தலையை மிகவும் பத்திரமாக வெளியே எடுத்து மீட்டெடுத்துள்ளனர்.

“>

 

மனிதாபிமானத்தை உணர்த்தும் இந்த மீட்புக் காட்சி தற்பொழுது எக்ஸ் தளத்தில் வீடியோவாக வெளியாகி இணையவாசிகளை உருக வைத்துள்ள நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது பாராட்டுகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.