கடந்த 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் தாய்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையத்தில் உள்ள ஒரு விமான பாலத்தின் வழியாக பேய் உருவங்கள் செல்வதாக கூறப்படுகிறது. இந்த சில வினாடி வீடியோ இணையதளத்தில் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மிதக்கும் மக்கள் ஒரு விமானத்திலிருந்து வெளியே வருவதை காணலாம்.

 

 

View this post on Instagram

 

A post shared by Scary_Encounter5 (@scaryencounter)

அந்த விமானம் உண்மையில் அங்கு இல்லை, ஏனெனில் அந்த ஏரோபிரிட்ஜ் எந்த விமானத்துடனும் இணைக்கப்படவில்லை. ஃபூகெட் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த விமான விபத்தில் இழந்த ஆன்மாக்கள் என்ற கூற்றுடன் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பல இணையவாசிகள் இந்த காணொளியை செப்டம்பர் 16ஆம் தேதி 2007 ஆம் ஆண்டு அன்று 90 பேர் கொல்லப்பட்ட one two go ஏர்லைன்ஸ் விமானம் 269 விபத்துடன் இணைந்து பேசுகின்றனர்.