இந்தியாவின் தலைநகரான டெல்லி, வரலாற்றுச் சின்னங்களுக்கு மட்டுமல்லாமல், தினசரி நடக்கும் வினோதமான நிகழ்வுகளாலும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அந்த வகையில், டெல்லியின் பரபரப்பான சாலைகளில் ஒரே மோட்டார் சைக்கிளில் 6 இளைஞர்கள் அமர்ந்து பயணம் செய்த காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

இரவில் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே ஆறு பேரும் ஒரு பைக்கில் பயணிக்கும் அந்தக் காட்சியைக் கண்ட பலரும் வியப்படைந்துள்ளனர். மேலும், தங்களை யாரோ காணொளி எடுப்பதைக் கவனித்த இளைஞர்கள், புன்னகைத்து, கையசைத்து, சிலர் வெற்றிச் சின்னத்தையும் காட்டினர்.

இந்தக் காணொளியை டிசம்பர் 12 அன்று ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்த பத்திரிகையாளர் அரவிந்த் சர்மா, “இதுதான் டெல்லி. இங்கே எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரே பைக்கில் ஆறு பேர் அமர்ந்திருப்பது ஒரு பெரிய சாதனை. அதனால் வெற்றிக் குறியைக் காட்டி, கையசைப்பது பொருத்தமானதுதான்.

மற்றதைப் போலீஸ் பார்த்துக் கொள்ளும்” என்று வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார். இதற்கிடையில், டெல்லிக்கு வந்த ஒரு ஜெர்மன் நாட்டுப் பெண், இங்குள்ள போக்குவரத்து முறையை ‘ரோலர் கோஸ்டர்’ சவாரிக்கு ஒப்பிட்டு, பல வாகனங்கள் கட்டுப்பாடின்றி வழித்தடங்களை மாற்றி முந்திச் செல்வதைக் குறித்துப் பதிவிட்டதும் கவனத்தைப் பெற்றுள்ளது.