பொதுவாக விவாகரத்து என்றாலே சோகம், கண்ணீர், உடைந்த கனவுகள் என்றுதான் பார்க்கப்படும். ஆனால், அந்த பிம்பத்தை உடைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

“உம்மே குல்சும்” என்ற கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு பெண் தனது விவாகரத்தைக் கேக் வெட்டிக் கொண்டாடுகிறார். அந்த கேக்கில் “Happily Divorced, End of 5 Years Love” (மகிழ்ச்சியான விவாகரத்து, 5 ஆண்டுகால காதல் முற்றுப்பெற்றது) என எழுதப்பட்டுள்ளது. துன்பமான உறவில் சிக்கித் தவிப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Umme Kulsum (@kulsum8888)

கேக் வெட்டும் போது அந்தப் பெண் கண் கலங்கினாலும், அவரது முகத்தில் ஒரு புதிய தொடக்கத்திற்கான தைரியம் தெரிகிறது. “வலி தரும் உறவில் சிக்கித் தவிப்பதை விட, சுயமாக நிற்பது சிறந்தது;

தினமும் செத்து பிழைப்பதை விட விவாகரத்து என்ற கறையுடன் வாழ்வதே மேல்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சமூகத்தின் கேலிக்குப் பயந்து தவறான உறவில் நீடிக்க வேண்டாம் என்ற அவரது செய்தி பல பெண்களின் இதயத்தைத் தொட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த பலரும் “உங்களின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள்” என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.