ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான ரங்கராஜ் பாண்டே, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தினமலர் நாளிதழ் குறித்த விமர்சனத்திற்கு ஆவேசமாக பதிலளித்த நிகழ்வு இணையதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அந்தப் பேட்டியின் போது, நேர்காணல் செய்தவர் தினமலர் நாளிதழை “ஆர்.எஸ்.எஸ் (RSS) பத்திரிகை” என்று குறிப்பிட்டார்.
இதனால் கடும் கோபமடைந்த ரங்கராஜ் பாண்டே, “சந்தடி சாக்கில் தினமலரை ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை என்று சொல்லிவிடாதீர்கள். எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்? நான் தினமலரிலும் வேலை பார்த்திருக்கிறேன், தினத்தந்தியிலும் வேலை பார்த்திருக்கிறேன். என்னிடம் பேசும்போது போற போக்கில் எதையும் பேசிவிடலாம் என்று நினைக்காதீர்கள்” என ஆவேசமாக எச்சரித்தார்.
😂😂😂 இந்த பொழப்புக்கு @Madeshjournali1
— தமிழக வெற்றிக் கழகம் (செய்திகள்) (@TVK_NewsTrichy) December 21, 2025
தொடர்ந்து அந்த நபர், “அது பாஜக-வின் ஆதரவு நாளிதழ் தானே?” என்று கேட்க, அதற்குப் பதிலடி கொடுத்த பாண்டே, “அப்படியானால் நீங்கள் திமுக-வுக்கு ஆதரவாகச் சொம்பு அல்ல, குடமே பிடிக்கிறீர்கள் என்று சொல்லலாமா? நீங்கள் மட்டும் நடுநிலையாளர்களா?” என்று பேட்டி எடுத்த நபரையே சரமாரியாகக் கேள்வி கேட்டு திணறடித்தார்.
