தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, கடைசியாக நிறைய பேர் அலையன்ஸ் அலையன்ஸ்ன்னு  கேக்குறீங்க.  ஐயா வீடு நாம கட்டி இருக்கிறோம், நம்ம வீடு. கிரகப்பிரவேசத்துக்கு கூப்பிட்டு இருக்கோம், எல்லாம் வந்தாங்க….. சாப்பிட்டாங்க….. கொஞ்சம் பேர் இருந்தாங்க….. NDA என்பது நம்ம வீடு. நாம கட்டுன வீடு. அவங்க எல்லாரையும் நாம கூப்பிட்டு, விழாவுக்கு வர சொன்னோம். எல்லாரும் வந்தாங்க NDA வீட்டில இருந்தாங்க,  அது இயற்கை. சில பேர் சாப்பிட்டு முடிச்சிட்டு கை கழுவிட்டு கிளம்பி போயிருவாங்க.

சில பேரு சாப்பிட்டுட்டு நம்மளோட இருக்கணும்னு நினைப்பாங்க. சில பேரு சாப்பிட்டுட்டு நம்ம குடும்பத்திலே ஒரு அங்கமாக இருக்கணும்னு நினைப்பாங்க. நம்ம வீடு NDA. நம்ம வீட்ல இருந்து வெளியே போன ஒருத்தங்க,  அந்த வீட்ல நான் இல்ல….. அந்த வீட்டில் நான் இல்லைன்னு சொன்னாங்கன்னா…..  அது அவுங்களுடைய கருத்து. வீட்டில் இருக்கிற நாம,  எங்க வீட்ல அவங்க இல்ல….. எங்க வீட்டுல அவங்க இல்லைன்னு….. நாம எங்கையா சொல்லணும். அதனால நமக்கு அது தேவையில்லை. NDA  என்பது நம்ம வீடு. மோடி என்பது நம்முடைய ஆளு. இந்த எலக்சன் வந்து நம்முடைய எலக்சன்.2014ல் 283 சீட்டை தாண்டி இருக்கிறோம்…. 2019இல் 303 தாண்டி இருக்கின்றோம். 2024இல் 400யை தாண்ட போறோம்…

வீட்டிலேயே வந்து உணவு அருந்தியவர்கள் வெளியே சென்ற பிறகு உணவு சரியில்ல……  காரம் கொஞ்சம் அதிகமா போட்டுட்டாங்க….. ஆனால் 9  வருஷமா இந்த காரத்தை பொறுத்துதான் சாப்பிட்டேன்…. இப்போ காரம்  அதிகமானது  தெரிஞ்சிருச்சு, அதனால அந்த வீட்ல நான் சாப்பிட போறது இல்ல. நமக்கு ஒரு தன்மை இருக்கிறது. நம் வீட்டில் உணவருந்தியவர்களை நாம் தவறாக பேசப்போவது கிடையாது.

இது  நம்ம வீடு,  நம்ம பிரதமர் மோடி அவர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றோம். வெளியில இருக்கிற ஒருத்தர் இந்த வீட்டுக்கு போயிட்டு, வெளியில் வந்துவிட்டேன். அந்த வீட்ல நான் இல்ல… வீட்ல இல்லைன்னு எங்களுக்கு தெரியும். எங்க வீட்ல அவங்க இல்ல… எங்க வீட்டுல அவங்க இல்லைன்னு வீட்டுல இருக்குற நாங்க போய் சொல்ல முடியுமா  ஐயா ?  NDA என்பது நம்ம அலையன்ஸ்.

நாம் உருவாக்கிய அலையன்ஸ். 1998 லிருந்து 25 ஆண்டுகளாக நாம் வைத்திருக்கின்றோம். இது தமிழக மக்கள் எல்லோருக்குமே புரியும். அதை வாரம் வாரம் யாராவது  சொல்லுவாங்களா ? மாசத்துக்கு பத்து டைம் சொல்லுவாங்களா ? இல்ல இதுவரை 17 டைம் யாராவது சொல்லுவாங்களா ? இதிலேயே புரிஞ்சுக்கோங்க…. பலம் யார் பக்கம் இருக்கிறது ? என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.