கேரளா மாநிலம் கொச்சியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் RSS தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்வதுதான் தீவிர இந்து என தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.
இதுபோன்ற தவறான கருத்து வரலாம். உண்மையான இந்து என்றால் யாரையும் எதிர்ப்பது அல்ல. அப்படி எதிர்க்கவில்லை என்பதற்காக இந்துக்கள் இல்லை என்ற அர்த்தம் இல்லை. நாம் இந்துக்கள் தான். ஆனால் அனைவரையும் அரவணைத்து இந்து மதத்தின் சாரம்சம் என்று அவர் கூறினார்.
