திரிபுராவில் உள்ள சோனாபூரில் ஒரு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு த்ரிஷா மஜூம்தார் என்ற 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஆறாம் வகுப்பு முதலில் பள்ளியில் முதல் ரேங்க் எடுத்து வந்த நிலையில் நன்றாக படிக்கக்கூடிய ஒரு மாணவியாக திகழ்ந்தார். இந்நிலையில் இந்த மாணவியை சீட்டிங் செய்ததாக கூறிய ஆசிரியை அவமானப்படுத்தியதால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 24ஆம் தேதி அந்த பள்ளியில் ஒரு தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில் மாணவி முறைகேடு செய்ததாக கூறி ஆசிரியை பினா தாஸ் என்பவர் விடைத்தாளை மாணவியின் முகத்தில் தூக்கி எறிந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் வீட்டிற்கு சென்றதும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். உடனடியாக சிறுமியை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மறுநாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக த்ரிஷாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தல் என்பதில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திரிஷா ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தன் மகளின் இறுதி சடங்குக்கு கூட பணம் இல்லாமல் அந்த தந்தை தவிர்த்து ஹாஸ்பிடலில் பிணத்தை வைத்திருந்தார்.
இதனை தெரிந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான சுதீப் ராய் பர்மன் என்பவர் ஹாஸ்பிடலுக்கு சென்று அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
