ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று காலை நடந்த ஒரு பயங்கர விபத்தில் 18 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது தியாகர் பகுதியில் பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்தது.

அதாவது எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி சென்ற லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதால் பயங்கர விபத்து ஏற்பட்டு தீ பிடித்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 18 ஆன்மீக பக்தர்கள் உயிரிழந்த நிலையில் 20 பேர் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.