மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரு தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்ஜினியர் ஆக 23 வயது மதிக்கத்தக்க பியூஸ் அசோக் காவ்டே என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த அலுவலகத்தில் நேற்று காலை 9:30 மணி அளவில் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது.

இந்த மீட்டிங்கில் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் வாலிபரும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மீட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே திடீரென ஃப்யூஸ் அங்கிருந்து எழுந்து சென்று தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அந்த வாலிபர் தற்கொலை செய்வதற்கு முன்பாக தன்னுடைய குடும்பத்தினருக்காக ஒரு கடிதம் எழுதியுள்ள நிலையில் அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் பணி அழுத்தம் காரணமாக அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீசார் விசாரணை நடத்தியதில் அப்படி எதுவும் தெரியவில்லை என்பதால் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.