மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் ஓய்வூதியம் பெறுவதற்கு பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஓய்வூதியம் பெறுவதற்கு 9 வகை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதனால் ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

இதன் காரணமாக அவர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் ஓய்வூதியம் பெற பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த அறிவிப்பை நேற்று டெல்லியில் வெளியிட்டார். மேலும் இந்த புதிய நடைமுறை டிசம்பர் மாதம் முதல் நாட்டில் அமலுக்கு வர இருக்கிறது.