உலகம் முழுவதும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது பெருமளவில் இருக்கிறது. குறிப்பாக சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் என்பது மிகவும் சுலபமான ஒன்றாக இருப்பதால் பலரும் அதனை விரும்புகிறார்கள். குறிப்பாக ஆன்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு ஜி பே, போன் பே உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஜிபே செயலியில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜிபே செயலியில் UPI circle, UPI voucher போன்ற புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் யுபிஐ Voucher வசதியில் நீங்கள் விரும்பும் நபர்களுக்கு prepaid voucher-களை அவர்களின் மொபைல் நம்பருக்கு அனுப்ப முடியும். இதனை பயன்படுத்தி அவர்கள் எந்த ஒரு யுபிஐ செயலி மூலமும் தேவையான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். மேலும் இதற்காக அவர்கள் யுபிஐ செயலியை வங்கி கணக்குடன் இணைத்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது.