சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நம்மை அதிரவைக்கும். ஆனால், இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் கோபத்தை வரவழைப்பதற்குப் பதிலாக முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது.

ஒரு சிறுவன் கடைக்குள் மிகச் சத்தமில்லாமல் நுழைந்து, அங்கும் இங்கும் நோட்டமிடுகிறான். கடைக்காரர் கவனிக்காத நேரமாகப் பார்த்து, ஒரு சாக்லேட்டைத் தூக்கிக் கொண்டு தனது பிஞ்சுப் பாதங்களால் மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறான்.

“உலகிலேயே மிக அழகான கொள்ளை” என்று வர்ணிக்கப்படும் இந்த வீடியோவை இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். சாக்லேட்டைத் திருடிவிட்டு அந்தச் சிறுவன் ஓடும் வேகமும், அவனது அப்பாவித்தனமான முகமும் நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

“இந்தச் சிறுவன் ஒரு புரொபஷனல் கொள்ளையன், இவனுக்குத் துப்பாக்கி தேவையில்லை, இந்த முகமே போதும்” என்றும், “இவ்வளவு அழகான கொள்ளையை இதுவரை பார்த்ததில்லை” என்றும் பயனர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்தச் சிறுவனின் மழலை மாறாத செயலால் இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.