உத்தரகாண்ட் மாநிலத்தின் அவசர காலங்களில் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்பட வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று, விதிமுறைகளை முற்றிலும் மீறி வழக்கமான நெடுஞ்சாலை வழித்தடத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் டாக்ஸியாகப் பயன்படுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த ஜூன் 24 அன்று ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தில், அவசர சிகிச்சைக்கான நோயாளிகளுக்குப் பதிலாகப் பொதுப் பயணிகள் ரெகுலராக ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறி நெட்டிசன் ஒருவர் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார்.
சாலைகளில் சைரன் சத்தத்துடன் வரும் ஆம்புலன்ஸ்களுக்கு மற்ற வாகன ஓட்டிகள் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் உடனடியாக வழிவிடும் நிலையில், இலாப நோக்கத்திற்காகப் பயணிகளை ஏற்றிச் சென்று ஒட்டுமொத்த ஆம்புலன்ஸ் சேவையின் மீதான நம்பிக்கையையே இந்தச் சம்பவம் சிதைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
<a href=”http://
A video is going viral on social media showing ambulance UK14PA6060 allegedly carrying passengers from Devprayag to Rishikesh on June 24. The vehicle meant to save lives in emergencies is allegedly being used as a passenger carrier on a regular highway route. pic.twitter.com/Rp4TZHyn0P
— Kumaon Jagran (@KumaonJagran) June 25, 2026
“>
இந்தத் தில்லுமுல்லு குறித்த வீடியோ தற்பொழுது எக்ஸ் தளம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் பரவி பெரும் வைரலாகி வருவதுடன், சம்பந்தப்பட்ட வாகனத்தின் மீதும் அதன் ஓட்டுநர் மீதும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கடுமையான அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
