கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 33 வயதான அஸ்பாக் மசாலி என்ற சுற்றுலாப் பயணி, கோவாவின் புகழ்பெற்ற கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் அதிர வைத்துள்ளது.
கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும், யாரும் கடலுக்குள் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாமல் அஸ்பாக் மசாலி கடற்கரையோரம் இருந்த ஒரு பெரிய பாறையின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வந்த ஒரு ராட்சத அலை அந்தப் பாறையை பயங்கரமாகத் தாக்க, நிலைதடுமாறி அவர் கடலுக்குள் விழுந்ததும், பலத்த நீரோட்டம் அவரை இழுத்துச் சென்ற மிரட்டலான அசல் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.
<a href=”http://
समंदर में बहा पर्यटक! गोवा के बागा बीच का रोंगटे खड़े करने वाला वीडियो!#GoaAccident #BagaBeach #GoaTourism #MonsoonAlert #LiveAccidentVideo #KarnatakATourist #PeoplesUpdate pic.twitter.com/644obnvTQj
— People’s Update (@PeoplesUpdate) June 25, 2026
“>
கடலின் சீற்றத்திற்கு நடுவே அவர் உயிர் பிழைக்கக் கடுமையாகப் போராடியும் பலனின்றி நீரில் மூழ்கிய நிலையில், தகவலறிந்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டுள்ளனர்..
