இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Elephants react to seeing beloved caretaker for first time in over a year (warning: loud!) pic.twitter.com/jK40R0cQLC
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) July 21, 2025
அதாவது அந்த வீடியோவில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் ஒன்றாக நின்று கொண்டிருக்கிறது. அப்போது அங்கு ஒரு ஆண்டுக்கு பிறகு, பராமரிப்பாளர் ஒருவர் வருகிறார். அப்போது யானைகள் அவரை பார்க்கிறது. அதன் பின் அந்த யானைகள் கூட்டமாக அவரை நோக்கி விரைந்து ஓடுகிறது. இந்த யானைகள் மிகவும் மகிழ்ச்சியாக சத்தமிட்டு கொண்டே அவரது பின்னால் ஓடுகிறது.
அதன் பின் அவரை சூழ்ந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் இது தூய காதல், உண்மையற்றது மற்றும் இன்றைய இணையதளத்தில் சிறந்த விஷயம் என்று கூறுகிறார்கள்.
