திருவனந்தபுரம்: பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் உயர் தொழில்நுட்ப F-35B போர் விமானம், ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அவசரமாக தரையிறங்கியது.
அப்போது விமானத்தில் ஹைட்ராலிக் சிக்கல் ஏற்பட்டது. மேலும், வானிலை மோசமாக இருந்ததுடன் எரிபொருள் அளவும் குறைந்திருந்தது. விமானி விரைவாக முடிவு எடுத்து, இந்திய விமானப்படையின் உதவியுடன் அந்த விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.
#WATCH | Kerala: The British Navy’s F-35 fighter aircraft, which made an emergency landing at Thiruvananthapuram International Airport on June 14, takes off from the airport. pic.twitter.com/RT9vlsL73W
— ANI (@ANI) July 22, 2025
“>
இந்த சம்பவத்திற்கு பின்னர், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, அதன் பழுதுபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 22) அந்த விமானம் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டது.
F-35B போர் விமானம் உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் பெறுமதி 110 மில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும். இது மணிக்கு சுமார் 2,000 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் உடையது. மேலும், செங்குத்தாக மேலே பறக்கவும், தரையிறங்கவும் செய்யக்கூடிய தன்மை கொண்டது.
VIDEO | Thiruvananthapuram: British Royal Navy F-35B Lightning fighter jet, which made an emergency landing at the international airport over a month ago, takes off.
Known to be one of the most advanced fighter aircraft in the world and worth over USD 110 million, the jet… pic.twitter.com/DjWHCtU9eB
— Press Trust of India (@PTI_News) July 22, 2025
“>
இந்த விமானம் பல்வேறு ரகமான போர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, மின்னணுப் போர், உளவுத்துறை பணி, வானிலிருந்து தரையை தாக்கும் பணி, வானில் இருந்து வானை தாக்கும் பணி உள்ளிட்டவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தச் சம்பவம், இந்திய விமானப்படையின் அவசர நிலை மேலாண்மை திறனை வெளிக்காட்டியது. மேலும், பிரிட்டன் மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்புத் தொடர்புகளை வலுப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது.
