நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கான கன்வார் யாத்திரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதில், ஒரு பாலத்தின் மீது நடக்கும் யாத்திரையின் போது, பெண் நடனக் கலைஞர்கள் ஆபாச பாடல்களுக்கு நடனம் ஆடிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோவில் பெரும் மக்கள் கூட்டம் அவர்களை ரசித்தும், ஊர்வலமாக இயங்கிய காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இந்த காணொளி எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது கன்வார் யாத்திரையின் புனிதத்தன்மையை பாதிக்கிறது என சமூக ஊடகங்களில் மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். “இது பக்திக்கே களங்கம், நம்பிக்கையின் மீது அவமதிப்பு,” என்று பெருமளவிலான நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்து அமைப்புகளும் இதற்குத் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டு, “சிவபெருமானின் பக்தி, பயபக்தியின் சின்னமாக இருக்கும் யாத்திரையில் பொழுதுபோக்கு என்ற பெயரில் இத்தகைய ஆபாச நிகழ்வுகள் நடைபெறக்கூடாது” எனக் கூறியுள்ளனர். சம்பவத்திற்கும், அதில் ஈடுபட்டவர்களுக்கும் எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் கட்டுப்படுத்த, யாத்திரை ஏற்பாட்டாளர்களும், நிர்வாகமும் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றதே சமூகத்தின் வலியுறுத்தல். மேலும் இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by ABP News (@abpnewstv)