டெல்லி உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடிதம் அனுப்பிய நிலையில் அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், நீதிபதிகள் சூரியகாந்த், விக்ரம் நாத், பி.எஸ் நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
குடியரசு தலைவர் மசோதாக்கள் தொடர்பாக முடிவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக 14 கேள்விகள் எழுப்பி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும் அனைத்து மாநில அரசுகளுக்கும் பதிலளிக்க வலியுறுத்தியும் உச்சநீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
