உத்தரப்பிரதேச மாநிலத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டம், ககோட் காவல் நிலைய எல்லையில் உள்ள வைர பாட்ஷாபூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிஃப் என்ற இளைஞர் (வயது 32), ஜூலை 11-ம் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியானதும், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இவரது மரணத்திற்கு காரணம், அவரது மனைவி ரூபினாவின் துரோகமான செயல் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தனது கண் முன்னே மனைவி ரூபினா, அவரது காதலன் சலீமுடன் உடலுறவு கொள்வதையும், அதற்கு முன்பாக ஆசிஃபுக்கு போதை மாத்திரைகள் கொடுத்து சுயநினைவை இழக்க செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த உண்மையை சகோதரரிடம் பகிர்ந்த ஆசிஃப், “அவளிடம் நான் எதையும் எதிர்பார்க்க முடியாது, இறந்தால் தான் இந்த வாழ்க்கை முடியும்” என்று கூறியுள்ளார். தற்கொலைக்கு முன் அவனது மனநிலை மிகவும் உடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஆசிஃப்பின் சகோதரர் அளித்த புகாரின் பேரில், ரூபினா, சலீம் மற்றும் மைத்துனர் ஷாரூக் ஆகிய மூவர்மீதும் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இது குறித்து புலந்த்ஷாஹர் எஸ்.பி சங்கர் பிரசாத் கூறும்போது, “கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.