தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றுக் கல்வித் துறையில் பல்வேறு புதிய மாற்றங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கல்வி நிறுவனங்கள் குறித்து வெளியிட்டுள்ள மிக முக்கியமான கொள்கை அறிக்கை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகிய இரண்டையுமே இந்தத் தவெக அரசு தனது இரு கண்களாகத்தான் பார்க்கும் என்று அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையாக, அரசுப் பள்ளிகளின் தரத்தையும் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து அதிரடி நடவடிக்கைகளையும் கல்வித்துறை மேற்கொள்ளும் என்று உறுதியளித்துள்ள அவர், இதன் மூலமாகக் கல்வித் துறையில் ஏற்படும் தேவையற்ற பண இழப்புகள் மற்றும் வீண் செலவுகள் அத்தனையையும் அடியோடு குறைப்போம் என்றும் சூளுரைத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தி ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை உறுதி செய்ய அமைச்சர் ராஜ்மோகன் எடுத்துள்ள இந்த அதிரடி சபதம் தற்போது எக்ஸ் தளம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி செம ட்ரெண்டாகி வருகிறது.
