“இனிமே நம்ம அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அந்தப் பழைய  டிசைன்ல சைக்கிள் குடுக்கக் கூடாது; பசங்க ஆசைப்படுற மாதிரி பல வண்ணங்கள்ல, செம கெத்தான புதிய வடிவமைப்புல இந்த நடப்பு வருஷமே  சைக்கிள்களைக் கொண்டு வந்து சேர்க்கணும்!”

என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுடனான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்திருப்பது கல்வித் துறையிலும் மாணவர் மத்தியிலும் மாபெரும் மகிழ்ச்சி அலையைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இம்முறை அதன் வழக்கமான தோற்றத்தை அடியோடு மாற்றி, நவீனப் புதுப்பொலிவுடன் வழங்கத் தவெக அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

மாணவர்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறும், அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்குச் செல்லும் வகையிலும் இந்த புது  டிசைன் மாற்றம் அமைய வேண்டும் என்று முதல்வர் விஜய் எடுத்த இந்த அதிரடி முடிவால் மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.