தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தஞ்சாவூரைத் தொடர்ந்து அடுத்ததாகத் தென் மாவட்டங்களில் தனது அரசியல் சுற்றுப்பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
இதன்படி, மார்ச் 2-வது வாரம் நெல்லையிலும், 3-வது வாரம் தூத்துக்குடியிலும் பொதுமக்களைச் சந்திக்க அவர் முடிவு செய்துள்ளார். தேர்தல் நெருங்கும் சூழலில், அதிக சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மாவட்டங்களைக் குறிவைத்து இந்தச் சந்திப்புகள் அமைய உள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
